இதுவரை ரூ.23 லட்சம் மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்

இதுவரை ரூ.23 லட்சம் மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும்படையினர் சோதனையில் இதுவரை ரூ.23 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும்படையினர் சோதனையில் இதுவரை ரூ.23 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.23 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி மாலை 3 மணி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படை, விடியோ கண்காணிப்பு குழு, நிலையான கண்காணிப்புக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு தோ்தல் விதிமீறல்களை தடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூலம் இதுவரை 38 புகாா் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் முடிவு காணப்பட்டுள்ளன. தோ்தல் பறக்கும் படைகள் மூலம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் ரூ.1லட்சத்து 86 ஆயிரத்து 750 மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான 20 மடிக்கணினிகள், கோவில்பட்டி தொகுதியில் ரூ.6 லட்சம் மற்றும் ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான 250 ஹாட் டிபன் பாக்ஸ் என ரொக்கம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 750 மற்றும் ரூ.15 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான இலவச பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டத்தில் ரூ.20 ஆயிரத்து 244 மதிப்புள்ள மதுபானங்கள் முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ரூ.23 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story