ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி, பசுமை பூங்கா அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி, பசுமை பூங்கா அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் சென்னை- - திருச்சி நெடுஞ்சாலையை கடந்து, எலப்பாக்கம் மற்றும் பேரூராட்சி பகுதிக்கு செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன் இருபக்கமும் உள்ள காலி இடங்கள் குப்பை கொட்டப்பட்டு, செடி கொடிகள் வளர்ந்து, சுற்றித்திரியும் கால்நடைகள் தங்குமிடமாக உள்ளது. வார விடுமுறை நாட்கள் மற்றும் நாள்தோறும் மாலை நேரங்களில், இப்பகுதியினை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன.

இதனால், அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனை, மின் வாரிய அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எலப்பாக்கம், திருமுக்காடு போன்ற கிராம பகுதிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, மேம்பாலத்தின் கீழ் புறவழிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story