மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீது சமூக ஆர்வலர்கள் புகார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் சென்னியப்ப தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 20 ஆண்டுகள் ஆனா வேப்பமரத்தை தனியார் நிறுவனத்தினர் வெட்டி வீழ்த்தியுள்ளனர். இதுகுறித்து காங்கேயம் வட்டாச்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் பல்வேறு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தனர்
.மேலும் அந்த நிறுவனத்தின் மீதும் மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் மீது அபராதம் விதிக்கவேண்டும் இல்லை என்றால் நிறுவனத்தின் முன்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். காங்கேயம் திருப்பூர் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சென்னிப்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம். மேலும் இந்த இடத்தில் இயங்கி வந்த தியேட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இயங்கவில்லை அதனால் அந்த தியேட்டர் இருந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனம் முழுவதுமாக இடித்துவிட்டு அந்த இடத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளை அந்த தனியாருக்கு சொந்தமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர் துவக்க விழா நடைபெற இருக்கும் வேளையில் நேற்று நள்ளிரவு ஜேசிபி இயந்திரத்தை வைத்து அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தை அடியோடு பிடுங்கி விட்டு அந்த இடத்தில் மரம் இருந்ததற்கான ஆதாரங்களையும் அளித்து விட்டனர் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இன்று காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
மேலும் மரத்தை வெட்டிய தனியார் நிறுவனத்தின் மீதும், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மரத்தை வெட்டி இடத்திலேயே மீண்டும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி அந்த நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். மரத்தை வெட்டுவதற்கு முன்பே சில சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று தெரிவித்து வந்ததையும் மீறி அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரவோடு இரவாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியது இப்பகுதி பொதுமக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த பெருந்து நிறுத்தத்தில் வரும் பயணிகள் இந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றுதான் பேருந்துக்கு காத்திருந்தனர் தற்போது இந்த மரம் இல்லாமல் வெய்யிலில் நிற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.