ஏழை மாணவி கலைக்கல்லூரியில் படிக்க உதவி

ஏழை மாணவி கலைக்கல்லூரியில் படிக்க உதவி

கல்வி கட்டணம் செலுத்துதல் 

ஏழை மாணவி கலைக்கல்லூரியில் படிக்க வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உதவியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தேவி. கணவரை இழந்த இவர் சாலையோரம் காய்கறி விற்பனை செய்து அதில் கிடைக்கும் குறைந்த வருமானத் தில் குடும்ப செலவுகளை கவனித்து வந்தார். மேலும் 2 மகள்களையும் படிக்க வைத்தார். தேவி தனது பிளஸ்-2 முடித்த மகளை ஆற்காட்டில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் கடன் வாங்கி சேர்த்தார்.

தேவியின் பொருளாதார நிலையை அறிந்த வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் நேரில் அவரை சந்தித்து மகளின் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார். முதற்கட்டமாக கல்லூரிக்கு சென்று வர 6 மாத பஸ் கட்டணத்துக்கான நிதியை மாணவியிடம் தினேஷ் சரவணன் வழங்கினார்.

கல்லூரியில் படித்து முடித்து எதிர்காலத்தில் இந்திய ஆட்சி பணியில் சேர வேண்டும் என்ற மாணவியின் லட்சியத்தை அடைய கடினமாக உழைக்கும்படி தினேஷ் சரவணன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story