சிறந்த சமூக சேவகர் விருது - ஆட்சியர் அறிவிப்பு
விருதுநகர் ஆட்சியர்
சுதந்திர தினவிழாவின்போது, முதல்வர் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2024 வழங்கப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 20.06.2024-க்குள் விண்ணப்பித்து, பின்பு உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 24.06.2024-க்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்: 04562-252701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.