பாலாராஜபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை திட்டம்

பாலாராஜபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை திட்டம்

தணிக்கை கூட்டம்

பாலாராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சமூக தணிக்கை திட்டம் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பாலராஜபுரம் ஊராட்சியில் உள்ள சின்னமநாயக்கன்பட்டியில், இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை திட்ட கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால ராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசும், மக்களும் இணைந்து, வளர்ச்சி திட்டங்களுக்கு என வழங்கப்பட்டுள்ள நிதியானது, முறையாக மக்களுக்கு சென்றடைந்து உள்ளதா? என்று சரி பார்த்து மக்களிடமே அறிக்கையினை சமர்ப்பித்தலே சமூக தணிக்கையாகும். மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டத்தின் பயன்கள் அனைத்தும் முறையாக சென்றடைந்ததை கண்காணிப்பதற்கும், மக்களுக்கும், திட்டத்தினை செயல்படுத்துபவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கும், அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செலவின தொகைக்கும், வேறுபாட்டினை கண்டறிவதற்கும், நேர்மையான, தூய்மையான மற்றும் முறைகேடற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சமூக தணிக்கை திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story