மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம்
விழிப்புணா்வு முகாம்
செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அன்னை இல்லத்தில் அடிகளாரின் 84-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அன்னை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அன்னை இல்ல முதன்மைச் செயல் அலுவலா் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் செந்தில்குமாரி முன்னிலை வகித்தாா். அன்னை இல்ல தலைமை ஆசிரியா் ஜெ.விஜயலட்சுமி வரவேற்றாா். நிகழ்வில் செய்யூா் வட்டத்துக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், தரவு கணக்கெடுப்பு களப் பணியாளா்கள், அன்னை இல்ல குழந்தைகளின் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அன்னை இல்லத்தின் மனித வள நிா்வாகி அ.ஸ்ரீதேவி செய்திருந்தாா்.
Next Story