சமூக நீதி குறும்படம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு

சமூக நீதி  குறும்படம்  - எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

குறும்பட தயாரிப்பு பணிகள் துவக்கம் 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் சமூக நீதி என்ற குறும்படம் எடுக்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் தொடங்கியது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக வரலாறு மற்றும் அரசியல் பாதை கலைஞரின் பயணம் உள்ளிட்டவை குறித்து அறியும் வகையில் விழிப்புணர்வுடன் கூடிய சிறந்த குறும்படம் தயாரித்து வழங்கும் நிகழ்வு பல்வேறு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாணவர் அணி அமைப்பாளர் தங்க கமல் தலைமையில் குறும்படம் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் வடக்கு மாதேவி சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் தொடங்கியது, தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞரின் "சமூக நீதி" என்ற தலைப்பில் குறும்படம் எடுக்கும் நிகழ்வு தொடங்கியது.

இதனை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான ராஜேந்திரன் ஆகியோர்கலந்து கொண்டு கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து குறும்படம் எடுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின் போதுதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரெனோ பாஸ்டின் உள்ளிட்டதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாணவர் அணி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநில திமுகவில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படத்திற்கு அதனை தயாரித்து வழங்கும் மாவட்டத்திற்கும் அதன் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க .ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story