நம்பேடு கிராமத்தில் மண்வள தினம் கொண்டாட்டம்
நம்பேடு கிராமத்தில் மண்வள தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் மண்வளதினம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சேத்துப்பட்டு உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் நம்பேடு கிராமத்தில் மண்வளம் தினம் குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.வேளாண்மை அலுவலர் முனியப்பன் முன்னிலையில் துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர் ராஜாராம் ஆகியோர் நம்பேடு கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு மண் ஊட்டச்சத்து பெரும் வழிமுறைகள் மண் மாதிரி சேகரித்தல் போன்ற பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது .
மேலும் மண் பரிசோதனை செய்வது எவ்வாறு எத்தனை இடங்களில் இருந்து மண் எடுத்து வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், பரிசோதனை செய்த பிறகு நிலத்தின் தன்மையை பொறுத்து வேதிப் பொருட்களை மண்ணில் எவ்வாறு இட வேண்டும், மண்வளம் பாதுகாப்பு குறித்தும் ,விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பயிரிடப்படும் நெல் மற்றும் தானியங்கள், கரும்பு போன்றவை அதிக மகசூல் பெற கண்டிப்பாக மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.