கூரம் கம்பன் கால்வாய் சிறுபாலத்தில் மண் அரிப்பு
கூரம் கம்பன் கால்வாய் சிறுபாலத்தின் ஒரு பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் அருகே ஓட்டை விழுந்துள்ளது.
கூரம் கம்பன் கால்வாய் சிறுபாலத்தின் ஒரு பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் அருகே ஓட்டை விழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கீழ்சிறுனை கிராமத்தில் இருந்து, கூரம் கிராமத்திற்கு செல்லும், தார் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, சிறுனை மக்கள் கூரம் வழியாக வதியூர், ஒழுக்கோல்பட்டு ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இச்சாலை குறுக்கே, கம்பன் கால்வாய் மீது, சிறுபாலம் செல்கிறது. இந்த சிறுபாலத்தின் ஒரு பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் அருகே ஓட்டை விழுந்துள்ளது. இது, மழைக்காலத்தில் முழுதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு, அந்த தரைப் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கம்பன் கால்வாயில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்து, மண் அரிப்பை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."
Next Story