விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிப்பு!
காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்களில் மண் மாதிரி வேளாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாய நிலங்களில் மண் மாதிரி வேளாண்மை துறை சார்பில் எடுக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில், விவசாயிகளின் வயலில் மண்மாதிரி எடுக்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் அக்ஷயா வரவேற்றார். காவேரிப்பாக்கம் மண் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் பாரதி கலந்து கொண்டு விவசாயிகளின் வயலில் மண் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் மண் பரிசோதனை செய்வதால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் பொறுப்பு அலுவலர் அய்யப்பன் மற்றும் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story