சூரிய இல்ல இலவச மின்சாரம் - அஞ்சலகத்தில் பதிவு

சூரிய இல்ல இலவச மின்சாரம் - அஞ்சலகத்தில் பதிவு

பிரதமர் மோடி 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்திற்கு தபால் அலுவலகம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு’ என்ற பெயரில் இலவச மின்சார திட்டம் ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசு மானியம் தருவதால் பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துகின்றன. இந்த நிலையில் தான் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது.

கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இந்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தங்கள் தொலைபேசிஎண், மின் இணைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டு மேற்க்கூரையின் புகைப்படம் உள்ளிட்ட சில தகவல்களை பிரதம மந்திரி – சூரிய இல்லம் என்ற செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக தபால் துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

. இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யவிரும்புவோர் தங்கள் பகுதி தபால்காரர் அல்லது தபால் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு கடைசி தேதியாக 8.3.2024ம் தேதி என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story