குமரி மலைவாழ் மக்களுக்கு சூரியஒளி சக்தி திட்டம்

குமரி மலைவாழ் மக்களுக்கு சூரியஒளி சக்தி திட்டம்

சூரியஒளி சக்தி திட்டம்

குமரி மலைவாழ் மக்களுக்கு  சூரியஒளி சக்தி திட்டம். கலெக்டர்  துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கான சூரியஒளி சக்தி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்து தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 100 பெண் தொழில்முனைவோருக்கும், புதிதாக தொழில் தொடக்க ஆர்வமுள்ள இப்பிரிவை சேர்ந்த புதிய தொழில் முனைவோருக்கும் சோலார் தையல் மிஷன், சோலார் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் இயந்திரம், சோலார் மசாலா அரவை இயந்திரம் ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சோலார் வாழ்வாதார திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், நாபார்டு வங்கி உதவி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், பாரதிய விகாஸ் அறக்கட்டளை (மணிபால், கர்நாடகா) முதன்மை மேலாளர் மனோகர், UNDP திட்ட அலுவலர் (டெல்லி) சுவேதா மரியம், துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story