செய்யூர் பகுதியில் சோலார் மூலமாக இயங்கும் சிக்னல்கள்

செய்யூர் பகுதியில் சோலார் மூலமாக இயங்கும் சிக்னல்கள்
சோலார் மூலம் இயங்கும் சிக்னல்கள்
செய்யூர் பகுதியில் சோலார் மூலமாக சிக்னல்கள் இயங்கி வருகின்றன.

செய்யூர் பகுதியில் திருவண்ணாமலை போளூர் - செங்கல்பட்டு எல்லையம்மன் கோவில் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், 110 கிலோமீட்டர் நீளமுடைய சாலையின் விரிவாக்க பணி, 600 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

செய்யூர் பஜார் பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்துள்ள நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு பின் வாகனங்கள் வளைவு பகுதிகளில், அதிவேகமாக சென்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையின் வளைவு பகுதிகள் மற்றும் விபத்து ஏற்படும் பகுதிகளில், சோலார் மூலமாக இயங்கும் எச்சரிக்கை சிக்னல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முற்றிலும் சூரிய ஆற்றல் வாயிலாக இயங்கும் இந்த சோலார் சிக்னல்கள், பகல் மற்றும் இரவு நேரத்தில் சூரிய ஆற்றலில் இருந்து சேமிக்கப்பட்ட மின்சாரம் வாயிலாக இயங்குகிறது. மேலும், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக, ஆரஞ்சு நிற விளக்கு பொருத்தப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story