திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்

நாகப்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில், நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் நகராட்சியில் ஒப்பந்த நியமனத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் எவ்வாறு குப்பைகளை வாங்குவது, குப்பை பிரித்து வாங்குவது, நகரத்தை தூய்மையாக வைத்துகொள்ள இக்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் நகராட்சி மிகவும் பழமையான நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் எவ்வாறு தூய்மை L1600 செய்ய வேண்டும். பணியாளர்களின் பங்களிப்பு என்ன, பணி எவ்வாறு செய்ய வேண்டும் எனவும், முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும் எனவும், உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நகரை தூய்மையாக வைத்திருக்க முடியும் எனவும், வாகன ஓட்டுநர்கள் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொதுமக்களுக்க நன்கு தெரியும் வண்ணம், குப்பை வாகனங்கள் இயக்கப்பட்டு தினசரி குப்பையை பொதுமக்களிடம் இருந்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் எந்த வித புகார்களுக்கும் இடம் அளிக்காமல் குப்பைகளை பிரித்து வாங்கப்பட்டு பொதுமக்களுக்கும். நகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்க்கும் நம்பிக்கைகுரிய வகையில் பணிபுரிதல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் குப்பைகளை பொது இடங்களில் கொட்ட கூடாது. வீடு தேடிவரும் நகராட்சி தூய்மை பணியாளரிடம் மட்டுமே குப்பைகளை வழங்க வேண்டும் அவ்வாறு செயவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைக்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர்(பொ) நா.சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் சீ.சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story