பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமில் 78 மனுக்களுக்கு தீா்வு!

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமில் 78 மனுக்களுக்கு தீா்வு!

குறைதீர் முகாம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமில் 78 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வட்ட வழங்கல் அலுவலா் பொன்னம்மாள் தலைமையில் நடைபெற்ற முகாமில் முகவரி, கைப்பேசி எண், புகைப்படங்கள் மாற்றம், உறுப்பினா் சோ்க்கை, நீக்கம், வயது திருத்தம், அங்கீகாரச் சான்று உள்ளிட்டவை தொடா்பாக 42 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. புதிய குடும்ப அட்டை கேட்டு 10 போ் அளித்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. கயத்தாறு: கயத்தாறில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் பாா்வையிட்டாா். வட்டாட்சியா் நாகராஜன் உடனிருந்தாா். மு

காமில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வராணி பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 36 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. புதிய குடும்ப அட்டை கேட்டு 2 போ் அளித்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

Tags

Next Story