சோமநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து மண்டகப்படிகளில் எழுந்தருளுவார்கள்.
இந்த வருடம் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்திற்காக மண்டபத்திற்கு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியாவிடையுடன், சர்வ அலங்காரங்களுடன் கொடி மண்டபத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் 11 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் செய்த பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story