சொத்து தகராறு தாயை கொலை செய்த மகன் மருமகள் கைது !

சொத்து தகராறு தாயை கொலை செய்த மகன் மருமகள் கைது !

பலி

ஈரோடு மாவட்டத்தில் சொத்து தகராறு ஏற்பட்ட நிலையில் தாயை கொலை செய்த மகன் மருமகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வெள்ளகோவில் பாளையத்தை சேர்ந்தவர் கர்ணாம்பாள் .இவரது கணவர் சடையப்பா கவுண்டர் . 25 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வடிவேல் மற்றும் நாமதேவன் என இரு மகன்கள் உள்ள நிலையில் கர்ணாம்பாள் இளைய மகன் நாமதேவன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே இளைய மகன் நாமதேவன் மற்றும் மருமகள் இந்துமதி ஆகியோருக்கு கர்ணாம்பாளுடன் அடிக்கடி சொத்து கேட்டு தகராறு செய்து வந்த நிலையில் இன்று மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்ட நிலையில் கருணாம்பாளை மகன் , மருமகள் இருவரும் சேர்ந்து கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நம்பியூர் காவல்துறையினர் மகன் நாமதேவன் மற்றும் மற்றும் இந்துமதியை கைது செய்தனர்.

Tags

Next Story