லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை- மரணத்தில் சந்தேகம் என மகன் புகார்

லாரி டிரைவர்  தூக்கிட்டு தற்கொலை-   மரணத்தில் சந்தேகம் என மகன் புகார்

ராமதாஸின் சடலம்

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (லாரி ஓட்டுனர்). இவருடைய மகன் பாலாஜி இன்று திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் நான் ஓசூர் பகுதியில் வேலை செய்து வருவதாகவும் எனது அப்பா ராமதாசுக்கு இரண்டு மனைவிகள் நான் முதல் மனைவி இந்துமதியின் மகன் எனது அம்மா கொரோனாவால் இறந்துவிட்டார். அதன் காரணமாக இரண்டாவதாக முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான கற்பகம் விநாயகர் டிரான்ஸ்போர்ட் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாகவும் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது அது மழையில் நனைந்து கட்டியானதால் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதனை முருகன் கேட்டு பலமுறை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் எனவும் அதே போல் எனது சித்தி எனது தந்தை ராமதாஸ் இறந்ததை மிகவும் தாமதமாக தொலைபேசியில் கூறினார். எனவே இருவர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே பிரேத பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் முத்துலட்சுமி உறவினருக்கும் மற்றும் இறந்து போன ராமதாஸ் உறவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதன் காரணமாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

Tags

Next Story