மது அருந்த காசு தராத தாய் - கழுத்தை அறுத்த கொடூர மகன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே சிவம்பட்டி அருகே உள்ள மஞ்சிப்பட்டி கிராமத்தில் பச்சையப்பன் வட்டத்தில் ராமலிங்கம் 67 க/பெ பால்ராஜ் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் பால்ராஜ் மற்றும் முருகன் இறந்த நிலையில் பாஞ்சோலை ,சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன், கவுரம்மாள் ஆகிய அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மகன் ரவிச்சந்திரன் பார்த்து வந்த நிலையில் இரண்டாவது மகன் ஆன சக்கரவர்த்திக்கும் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகம்மாள் ஆகிய இருவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகள் பெற்ற நிலையில் திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளில் கணவன் மனைவி தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டு முருகம்மாள் தற்கொலை செய்துகொண்டார்.
இதன்பின் இரண்டு ஆண் குழந்தைகளும் தாய் வழி பாட்டி வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர் பிறகு சக்கரவர்த்திக்கு கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் மணிமேகலை என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்று ஆறு மாதத்தில் இரண்டாவது மனைவி மணிமேகலை விவாகரத்து பெற்றுச் சென்றுள்ளார் இந்நிலையில் தனிமையில் வசித்து வந்த சக்கரவர்த்தியை அவருடைய தாயார் ராமலிங்கம் பார்த்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக தன் தந்தை பால்ராஜ் தம்பி முருகேசன் இருவரும் தருமபுரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்தவர்களின் காப்பீட்டுத் தொகை தாய் ராமலிங்கம் அம்மாவிடம் வந்துள்ளது போதைக்கு அடிமையான சக்கரவர்த்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று தண்ணி அடிப்பதற்கு காசு தரவில்லை என்று ஆத்திரத்தில் கத்தி எடுத்து கழுத்தில் அறுத்து ரத்த வெள்ளத்தில் இருந்து தாயரைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் உள்ள புதரில் மறைந்துள்ளார். வலியால் ராமலிங்கம் சத்தமிட்டதில் அக்கம் பக்கத்தில் ஓடி வந்து பார்க்கையில் ரத்தத்தில் மிதந்த ராமலிங்கம் சக்கரவர்த்தி என்று கூறிக் கொண்டே துடிதுடித்து இறந்துள்ளார் இது குறித்து மத்தூர் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து சென்ற மத்தூர் போலீசார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் வீட்டின் அருகில் பதுங்கி இருந்த சக்கரவர்த்தியை கைது செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.