தந்தை கண்டித்ததால் விரக்தியில் மகன் தற்கொலை

தந்தை கண்டித்ததால் விரக்தியில் மகன் தற்கொலை

லால்குடி அருகே மணக்காலை சேர்ந்த விமல்ராஜ் பயிற்சி வகுப்புக்கு சரிவர செல்லாத நிலையில், அவரின் தந்தை கண்டித்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

லால்குடி அருகே மணக்காலை சேர்ந்த விமல்ராஜ் பயிற்சி வகுப்புக்கு சரிவர செல்லாத நிலையில், அவரின் தந்தை கண்டித்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 21 வயதான விமல்ராஜ். இவரது தந்தை சிவக்குமார் திருச்சியில் ரயில்வே துறையில் உள்ள அசிஸ்டன்ட் லோகோ பைலட் பயிற்சி பள்ளியில் பயிற்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் பணம் டெபாசிட் செய்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் இருந்துள்ளார் விமல்ராஜ். இதனை அவரது தந்தை சிவகுமார் கண்டித்துள்ளார்.இதனால் மணமடைந்த விமல் ராஜ் கடந்த 5 ம் தேதி மதியம் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதனைக் கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார். இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story