சோனியா காந்தி பிறந்த தினம் - சிறப்பு பூஜைகள்

சோனியா காந்தி பிறந்த தினம் - சிறப்பு பூஜைகள்

காங்கிரசார் சிறப்பு பூஜை 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்ட வருகிறது . தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். சோனியா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோவிலில், வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்சியும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வின்போது வடக்கு வட்டார பொதுச்செயலாளர் மாடசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story