ஸ்ரீவீரராகவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவீரராகவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்க வாசல் திறப்பு

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர்

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கடந்த 13-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை பெருமாளுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ தேவி,பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீ வீரராகவப்பெருமாள்கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அதிகாலை3:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 5:30 மணிக்கு கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பெருமாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு ராப்பத்து உற்சவம்அதைத்தொடர்ந்து திருவீதியுலா நடைபெறுகிறது. அனுமந்தராயர், மூலவர், தாயார் ஆகியோரை தரிசனம் செய்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமானை வழிபட்டனர்.

பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர். இரவு 10 மணிக்கு சொர்க்கவாசல் நடை சாற்றப்படுகிறது. மேலும் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி டிரஸ்ட் மூலமாக ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரித்து பிரசாதமாக வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story