திருவாரூர் : பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

X
பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருக்கனமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் எஸ்பி பங்கேற்றார்
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெருமாள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பரமபத வாசல் வழியாக மேளதாளங்கள் முழங்க வண்ண வேடிக்கையுடன் பெருமாள் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story
