வாக்குப் பதிவு பொருள்கள் பிரிக்கும் பணி:தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு
பொருட்கள் ஆய்வு செய்த அதிகாரிகள்
சிதம்பரம் மக்களவைக் தேர்தலில், பயன்படுத்தக் கூடிய வாக்குப் பதிவு பொருள்கள் வாக்குச் சாவடியாக பிரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் அப்பணியை பார்வையிட்ட அவர், அனைத்து வாக்குப்பதிவு பொருள்களும்,
விடுபடாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி,
வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் ,ஷீஜா, வட்டாட்சியர்கள் கலிலூர்ரகுமான், ஆனந்தவேல், இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.