சோத்துப்பாறை அணையில் 120 நாட்களை கடந்தும் முழு கொள்ளளவு

சோத்துப்பாறை அணையில் 120 நாட்களை கடந்தும் முழு கொள்ளளவு நீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் 3,000த்திற்க்கும், மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோத்துப்பாறை அணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வழிந்தோடியது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 10 தேதி வரை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்ததால், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து உபரி நீர் வெளியேறி வந்தது. இந்த நிலையில் அணை கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் அணையின் முழு கொள்ளவுடன் 120 நாட்கள் நிறைந்து உபரி நீர் வழிந்து ஓடுவது இதுவே முதல் முறையாகும்.

தற்பொழுது சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 30 கன அடி ஆகவும், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 30 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களை கடந்து முழு கொள்ளவுடன் அணைகளிலும் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story