தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

தனி நலவாரியம் அமைக்க  கோரிக்கை

கோரிக்கை

தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என அரசுக்கு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத் தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கி மேலவீதி செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

மாநில காப்பாளர் போரூர் ரங்கநாதன், பொதுச்செயலாளர் அம் பத்தூர் ரங்கநாதன், பொருளாளர் பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத்தலைவர் கெஜபதி, துணை செயலாளர் ஜெயமணி, விழுப்புரம் மாவட்ட கவுரவ தலைவர் மோகன், தலைவர் மணி, செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜசேகர், துணைத்தலை வர்கள் செல்வம், ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் சுகுமார், கணேசன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், சட்ட ஆலோசகர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத்திற்கென தனியாக நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story