சௌந்தரநாயகி சமேத திருமேனிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே பழமையான ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத திருமேனிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூரில் மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ திருமேனிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோயிலின் முன் யாகசாலைகள் அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூர்ணகுதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. விமானக்கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.