தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்

ஊத்தங்கரையில் நடந்த தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் தொகுப்பு வீடுகள்,அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆசிரியர் நகர் பகுதியில் தென்னிந்திய பழங்குடி கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் பழங்குடி பாலு தலைமையில் நடைபெற்றது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இருளர்,நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பாக பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழங்குடியினர் மக்களுக்கு தொகுப்பு வீடுகள், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் பூர்த்தி செய்ய வேண்டும் சாதி சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும் நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும், விலையில்லா கறவை பசுமாடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, பெருமாள், வேடியப்பன், சக்திவேல், சதீஷ், சென்னன், ராணி, எழிலரசி, சுவாமிநாதன், ரேகா, துளசி, வெள்ளிமலை சரோஜா பாலு ராஜி வசந்தி வேடியப்பன் மாதையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story