தென்னிந்திய பல்கலைகழக அளவிலான யோகாசன போட்டி
திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான யோகாசன போட்டிகள் தொடங்கியது.
யோகாசன போட்டிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வேல்ராஜ் துவக்கி வைத்து பேசினார். கல்லூரியின் சேர்மன் பெரியசாமி , பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பயிற்சி தலைவர் சுவாமிநாதன், உள்ளிட்ட பலர் முன்னிலையில் போட்டிகள் துவங்கியது. தென்னிந்திய பல்கலைக்கழக அளவிலான யோகாசன போட்டியில் 115 பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உட்பட 14 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த யோகாசன போட்டியில் பங்கேற்பது மிகவும் சவாலாக உள்ளது என்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களும் தங்களது தனி திறமைகளை அபாரமாக வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் தமிழக போட்டியாளர்களும் சிறப்பான இடத்தை பிடித்து பெருமை சேர்ப்போம் என போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.