தென்னிந்திய கைப்பந்துப் போட்டி: திருவண்ணாமலை மாணவி தேர்வு

மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு
தென்னிந்திய பல்கலைக்கழக அளவில் பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க, திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கைப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவி ஜி.அமுதா, எம். எஸ்.சி. கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவி இ.கௌதமி, பி.காம். முதலாம் ஆண்டு மாணவி எம்.சவிதா, பிசிஏ இரண்டாம் ஆண்டு மாணவி இ.ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தனர். எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவி ஜி.அமுதா போட்டியில் முதலிடம் பிடித்து வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழக கைப்பந்து அணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட மாணவி அமுதாவை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலர் எல்.விஜய் ஆனந்த், பொருளாளர் இ. ஸ்ரீதர், கல்லூரி கல் விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநர் ம.கோபி, உடல்கல்வியாளர் ஆர்.சுகன்மாணிக்கராஜ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
