தென்னிந்திய மகளிர் கோ -கோ துவக்கம்

X
கோ கோ போட்டிகள்
திருவாரூர் மத்திய பல்கலைகழக மைதானத்தில் தென்னிந்திய அளவிலான மகளிர் கோ-கோ விளையாட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இங்கு தென்னிந்தியளவிலான மகளிர் கோகோ விளையாட்டு போட்டி முப்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பல்கலைக்கழகங்களில் சங்கத்தின் இணைச் செயலாளர் பல்ஜித் சிங் செகோன் பங்கேற்றார். இந்த போட்டியில் தென்னிந்திய அளவில் 60 பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 600 மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
