தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்க உள்ளது. எனவே அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பருவ மழையால் சேலம், மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி ஆகிய தாலுகாக்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ள 23 பகுதிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்யும் போது அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீர்நிலைகள், கால்வாய்கள் தூர் வாரப்பட்டு மழைநீர் தங்கு தடையின்றி செல்ல அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. மழை, காற்றால் சாலையில் மரங்கள் விழுந்தால் அவற்றை உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மருத்துவத்துறையினர் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கால்நடைகளுக்கு பரவும் நோய்கள் குறித்தும் அவற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

பேரிடர் குறித்த தகவல்களை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story