தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் !

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு  ஆய்வுக்கூட்டம் !

ஆய்வுக்கூட்டம்

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு மற்றும் தயார் நிலை ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு மற்றும் தயார் நிலை ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழையின் பொழுது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலைகள் பணிகள் குறித்து வருவாய்த்துறை காவல்துறை தீயணைப்பு துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மருத்துவத்துறை கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மின்சாரத் துறை அலுவலர்கள் தாழ்வாக உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை 10 77 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 04343234444 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேரிடர் வெள்ள பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வந்தன கார்க் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறல் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புஷ்பா வருவாய் கோட்டாட்சியர் பாபு வேளாண்மை துறை இணை இயக்குனர் பச்சையப்பன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராஜமோகன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ஜெய்சங்கர் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story