தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டி!

தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டியாக கருதப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தென்னலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பல நூறு ஆண்டுகளாக வரலாற்று சிறப்புமிக்க ஏழு வாடிவாசல் கொண்ட போட்டியாக முன்பு நடைபெற்று வந்தது தற்போது ஒரு வாடிவாசலில் மட்டும் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் காளைகளும் நானூறு மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கு பெற்றனர் இந்த போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்லபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தனர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Tags

Next Story