குமரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

குமரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது
X

மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை மொழிந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை, சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை, புதன்கிழமை இரவுமுதல் கன மழையாக பெய்யத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், கொட்டாரம், மயிலாடி, ஒற்றையால்விளை, குருந்தன்கோடு, அடையாமடை, புத்தன்அணை, சுருளோடு, மாம்பழத்துறையாறு அணை போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. நேற்று காலை முதல் காலை முதல் இன்று வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பியுள்ளதாலும் பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Tags

Next Story