தேர்தல் பணி வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி

தேர்தல் பணி வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி

எஸ்பி  ஹர்ஷ்சிங்  ஆய்வு 

மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டத்தில் வருகின்ற 19/04/2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து வாகனங்களை வரவழைக்கப்பட்டு (QRT TEAM 29 வாகனங்கள், mobile team 63 வாகனங்கள்)அனைத்து வாகனமும் சரியாக பராமரிக்கப்பட்டு அனைத்து வாகனங்களிலும் மைக்குகள் (வாக்கி டாக்கி) சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் பார்வையிட்டார்.

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 653 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் 2-கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,7- துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19-காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவியாளர்,தாலுகா காவலர்கள்,ஆயுதப் படை காவலர்கள், ஒடிசா மாநில காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,ஓய்வு பெற்ற காவல் துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நிறுமம் (1- company ) என மொத்தம் 1565 பேர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணிக்காக அறிக்கை செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் வாக்குச்சாவடியில் பணியாற்றும் காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் செய்யக்கூடாத நடவடிக்கைகள் பற்றிய அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story