திருவாரூர்: காவல்நிலையத்தை ஆய்வு செய்தார் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: காவல்நிலையத்தை ஆய்வு செய்தார் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

காவல்நிலையத்தை ஆய்வு செய்தார் எஸ்பி

காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருமக்கோட்டை மற்றும் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். காலையிலும் மாலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story