கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு
எஸ்பி ஆய்வு
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளை ஆய்வு செய்தார். குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ள வழக்குகளில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய அறிவுரைகள் வழங்கினார். கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து, வழக்குகளை உடனடியாக கோப்புக்கு எடுக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
Next Story