துப்பாக்கி சுடும் மைதானத்தை ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு
எஸ்பி ஆய்வு
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019 ம் ஆண்டு 33வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து களக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மேலும் எஸ்.பி., அலுவலகம் உலகங்காத்தான் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தொடர்ந்து ஆயுதப்படை மைதானம் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது.
இந்நிலையில் கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள மல்லிகைபாடி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை கலெக்டர் ஷர்வன்குமார், எஸ்.பி., சமய்சிங் மீனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
Tags
Next Story