நகைக்கடைகளில் இரவுநேர காவலாளியை நியமிக்க எஸ்பி உத்தரவு

நகைக்கடைகளில் இரவுநேர காவலாளியை நியமிக்க எஸ்பி உத்தரவு
X

மாவட்ட எஸ்பி ஜவகர்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் நகைக்கடைகளில் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோட்டில் மாவட்ட காவல்துறை சார்பில் நகைக்கடை உரிமையாளர்களான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் , நகைக்கடைகளின் நான்கு புறமும் கண்காணிக்க கேமராக்களை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிதாக நகை அடமானம் வைக்க வருகின்ற ஆதாரங்களை வாங்கி வேண்டும் , இரவு நேர காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உடைந்த அறுந்து போன நகைகளை கொண்டு வருபவர் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் , சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்

Tags

Next Story