ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை ஏற்ற எஸ்பி

ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை ஏற்ற எஸ்பி

அணிவகுப்பை ஏற்ற எஸ்பி

நெல்லையில் ஊர்க்காவல் படை அணிவகுப்பு நடைபெற்றது.

நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்படி நெல்லையில் ஊர் காவல் படையினருக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான 33 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி 45 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நேற்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்பி சிலம்பரசன் கலந்துகொண்டு ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Tags

Next Story