உசிலம்பட்டியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்பி

உசிலம்பட்டியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்பி

எஸ்பி ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குசாவடி மையங்களை எஸ்.பி. அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குசாவடி மையங்கள் மற்றும் வாகன சோதனை மையங்களை மதுரை மாவட்ட எஸ்.பி., அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய திருநாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது., நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழலில் வாக்குச்சாவடி மையங்களையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 90 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்ந் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.

உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி. அரவிந்த் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் வாகன சோதனை மையங்களையும் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story