மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய எஸ்பி

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய எஸ்பி

நிதியுதவி வழங்கிய எஸ்பி

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் காவலர் திட்டத்தை செயல்படுத்த நிதி உதவி வழங்கினார்.

இன்று காலை 10மணியளவில் தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில், மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம் (State Police Cadets (SPC) என்ற திட்டத்தை இம்மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்டத்தில் உள்ள 60 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள மேற்சொன்ன 60 அரசு உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதின் பேரில், அவர்களும் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்துவது சம்மந்தமான ஆலோசனைகள் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வீதம் 60 உயர்நிலைப் பள்ளிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூபாய். 30,00,000/- (ரூபாய் முப்பது இவட்சம் மட்டும்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்குமான காசோலையை 60 உயர் நிலைப் பள்ளிகளுக்கு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு தனித்தனியே ஸ்டீபன் ஜேசுபாதம், காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. இளங்கோவன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் கோ. அன்பழகன், இத்திட்டத்தின் பொறுப்புக் காவல் அலுவலரும், தருமபுரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளரும் ஆகிய கே. புவனேஷ்வரி, ஆகியோர் கலந்துகொண்டர்.

Tags

Next Story