மத்திய சேமக் காவல் படையினரை வரவேற்ற எஸ்பி

மத்திய சேமக் காவல் படையினரை  வரவேற்ற எஸ்பி

வரவேற்ற போது

தேர்தல் அலுவலுக்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய சேமக் காவல் படையினரை பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அலுவலுக்காக மத்திய சேமக் காவல் படையினர் வருகை தந்தனர், பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய திருமண மண்டபத்திற்கு, வந்த மத்திய சேமக் காவல் படையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி நேரில் சென்று பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார்.

இந்நிகழ்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்வரன், பெரம்பலுர் நகர காவல் ஆய்வாளர் கருணாகரன், நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story