பத்திரப்பதிவு அலுவலகத்தில் இட நெருக்கடி
பத்திரப்பதிவு அலுவலகம்
பத்திரப்பதிவு அலுவலகம் புதிதாக கட்டப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இணை சார் -பதிவாளர் அலுவலகம் எண்-2 இயங்கி வந்தது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. எனவே, தற்காலிகமாக திருவண்ணாமலை-வேட்டவலம் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இந்தக் கட்டடத்தில் அலுவலக ஊழியாக்கள் அமருவதற்குக்கூட போதிய இட வசதி இல்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 200 பத்திரங்கள் பதிவாகும் இந்த அலுவலகத்தை சிறிய கட்டடத்துக்கு மாற்றியதால் சார் - பதிவாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையும்,பெரும் சிரமம் அடைந்து வருகின்றன.
Next Story