ராமநாதபுரம்: தைப்பூச விழா
தைப்பூச திருவிழா
ராமநாதபுரம் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ராமநாதபுரம் திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி தாயார் உடன்மர் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானையுடன் வீற்றிருரக்கும் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருநாளை முன்னிட்டு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்று சென்றனர்.
Next Story