சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜ., சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது.

திண்டுக்கல்: அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் பிராண பிரதிஷ்டை நடைபெறுவதை ஒட்டிபாஜக சார்பாக சிறப்பு அபிஷேகம் மற்றும் மாபெரும் அன்னதான நிகழ்வு நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு திண்டுக்கல் மாநகர் தெற்கு மேட்டுப்பட்டி காளியம்மன் கோவிலில் பாஜக திண்டுக்கல் நகர் தெற்கு தலைவர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் பிராண பிரதிஷ்டை நடைபெறவதையொட்டி சிறப்பு அபிஷேகமும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாஜக மாவட்ட தலைவர் தனபால் மற்றும் மாநகர் தெற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story