சாந்தாரம்மன் சன்னதியில் உள்ள காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம்!

புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் சார்பில் சாந்தாரம்மன் சன்னதியில் உள்ள காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் புதுக்கோட்டை அதிமுக சார்பில் புதுக்கோட்டை மையப் பகுதியில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சாந்தா அம்மன் சன்னதியில் உள்ள காசி விஸ்வநாதருக்கு இன்று காலை 5 மணிக்கு 13 விதமான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ. எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் தலைமையிலும் புதுக்கோட்டை நகர வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் முன்னிலையில் காசி விஸ்வநாதர் மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது பின்னர் 1000 பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவ படங்களுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story