செங்கம் அருகே நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

செங்கம் அருகே நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

செங்கம் அருகே தீர்க்க ஜால ஈஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத சோமவார பிரதோஷத்தினை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நெடுங்காவாடி கிராமத்தில் அமைந்துள்ள தீர்க்க ஜால ஈஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத சோமவார பிரதோஷத்தினை முன்னிட்டு சுவாமிக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story